இசை அமைப்பாளர் இளையராஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திங்கள்கிழமை வீடு திரும்பினார்.
மார்பில் அசௌகரிய உணர்வு, வலி காரணமாக இளையராஜா (72), சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். இதய நோயால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாதிக்கப்பட்டுள்ளதால், ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகளை டாக்டர்கள் செய்தனர்.
பரிசோதனையில் இதய ரத்த நாளங்களில் பாதிப்பு இல்லாத தன்மை தெரியவந்தது. இதையடுத்து இதய சிகிச்சை மீண்டும் தேவையில்லை என டாக்டர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து நேரடியாக ஒரு படத்துக்கு இசை அமைக்கும் பணியை மேற்கொள்ள அவர் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பினார்.
2 comments:
cool
cool
Post a Comment